தேமுதிகவினர் பக்குவம் இல்லாத அரசியல் நடத்துகின்றனர்: முதல்வர்
தேமுதிகவினர் பக்குவம் இல்லாத அரசியல் நடத்துவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


தேமுதிகவினர் பக்குவம் இல்லாத அரசியல் நடத்துவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சேலம் ஓமலூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, திமுக தேர்தல் அறிக்கையை படித்து பார்த்த பிறகே கருத்து சொல்லுகிறேன். புதிய தமிழகம் ஏற்கெனவே எங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது.
தேமுதிகாவால் அதிமுகவுக்கு இழப்பு இல்லை. தேமுதிகவினர் பக்குவம் இல்லாத அரசியல் நடத்துகின்றனர். கட்சிகளின் வாக்கு வங்கிக்கு ஏற்றவாறு தொகுதி எண்ணிக்கை ஒதுக்கப்படுகிறது.
திமுக தேர்தல் அறிக்கைக்கு முன்பாகவே, முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு நடைமுறைப்படுத்திய அரசு அதிமுக அரசு. புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்த பின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். அதிமுக கூட்டணி இந்த தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும். மக்கள் சரியான தீர்ப்பை எங்களுக்கு வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...