8 எம்பிக்கள் இடைநீக்கம் ரத்து! மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
8 எம்பிக்கள் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டது பற்றி...


எதிர்க்கட்சிகளை சேர்ந்த 8 எம்பிக்கள் இடைநீக்கத்தை ரத்து செய்யும் தீர்மானம் மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதியில், கடந்த பிப்ரவரி 3 அன்று, குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீது ராகுல் காந்தி உரையாற்றும்போது, முப்படைகளின் தலைமைத் தளபதி எம்.எம். நரவணே எழுதிய புத்தகத்தில் சில வரிகளைக் குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடியையும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் விமர்சித்தார்.
இதனைத் தொடர்ந்து, விவாதத்துக்கு தொடர்பில்லாத விவகாரத்தை பேச அனுமதியில்லை என்று ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்களவை தலைமைச் செயலரின் மேஜை மீது ஏற முயன்றதுடன், காகிதங்களைக் கிழித்து, அவைத் தலைவா் இருக்கையை நோக்கி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வீசினர்.
இதனால், அவைக்குள் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக காங்கிரஸ் எம்.பி.க்களான மாணிக்கம் தாகூா், குா்ஜீத் சிங் அஜ்லா, ஹிபி ஈடன், சி.கிரண் குமாா் ரெட்டி, அமரீந்தா் சிங் வாரிங், பிரசாந்த் படோல், டீன் குரியகோஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்டேசன் ஆகியோா் கூட்டத்தொடர் முழுவதும் அவை நடவடிக்கைகளில் இருந்து இடைநீக்கம் செய்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்திருந்தார்.
எம்பிக்கள் இடைநீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், அவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமையில் திங்கள்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இதில், எதிர்க்கட்சி எம்பிக்களின் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பதாகைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட புகைப்படங்களைப் பயன்படுத்த மாட்டார்கள் என்றும் அவையில் நன்னடத்தையுடன் செயல்படுவார்கள் எனவும் எம்.பி.க்கள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, இடைநீக்கத்தை ரத்து செய்ய ஓம் பிர்லா ஒப்புக் கொண்டார்.
இந்த நிலையில், மக்களவையில் இன்று 8 எம்பிக்களின் இடைநீக்கத்தை ரத்து செய்யும் தீர்மானத்தை ஓம் பிர்லா முன்மொழிந்தார். தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
8 எம்பிக்களின் இடைநீக்கத்தை ரத்து செய்ததை காங்கிரஸ் எம்பியும் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி வரவேற்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...