சென்னை: சென்னையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1,961 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டிருக்கும் புள்ளி விவரத்தில், சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 258 பேரும் கோடம்பாக்கத்தில் 227 பேரும் அண்ணாநகரில் 209 பேரும் கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர்.
கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு வரை, அனைத்து மண்டலங்களிலும் 200-க்கும் குறைவான கரோனா நோயாளிகள் இருந்த நிலையில், கடந்த வாரம் முதல் கோடம்பாக்கம் உள்ளிட்ட ஒரு சில மண்டலங்களில் பாதிப்பு 200க்கும் அதிகமாக உள்ளது.
இன்று காலை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,38,28 ஆக உள்ளது. அவர்களில் 2,32,151 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். 4,176 பேர் கரோனாவுக்கு பலியாகிவிட்டனர்.
மார்ச் மாதத்தில் கரோனா தொற்றுப் பரவல் எவ்வாறு படிப்படியாக அதிகரித்து வந்திருக்கிறது என்பதை இந்த புள்ளி விவரத்தைப் பார்த்தாலே புரியும்.
மார்ச் 12: 265
மார்ச் 11: 292
மார்ச் 10: 275
மார்ச் 09: 236
மார்ச் 08: 229
மார்ச் 07: 251
மார்ச் 06: 243
மார்ச் 05: 225
மார்ச் 04: 189
மார்ச் 03: 184
மார்ச் 02: 167
மார்ச் 01: 171
மண்டல வாரியாக கரோனா நிலவரம்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாட்டின் பாதுகாப்பைச் சமரசம் செய்யும் காங்கிரஸ்: பிரதமர் மோடி!

கிழக்குச் சீமையிலே பட பாணியில் புதிய தொடர்!

தில்லியில் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஹோர்முஸ் நீரிணை பழைய நிலைக்குத் திரும்பாது: ஈரான்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


