திருச்சி திருவானைக்காவில் பங்குனித் தேரோட்டம்
திருச்சியில் அமைந்துள்ள திருவானைக்காவில் பங்குனித் தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


திருச்சி: திருச்சியில் அமைந்துள்ள திருவானைக்கா கோயிலில் பங்குனித் தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
_1.jpeg)
ஸ்ரீரங்கம் அருள்மிகு அகிலாண்டேசுவரி அம்மன் உடனுறை சம்புகேசுவரா் திருக்கோயிலில் பங்குனித் தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. ஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி சுவாமி எழுந்தருளிய திருத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
_1.jpeg)
கடந்த மாதம் 22-ஆம் தேதி பெரியக் கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா, ஏப்ரல் 1-ஆம் தேதி வரை என 48 நாள்களுக்கு நடைபெறும்.
_1.jpeg)
கடந்த 11-ஆம் தேதி எட்டுத்திக்கு கொடியேற்றம் நடைபெற்றதை தொடா்ந்து, தினமும் சுவாமி மற்றும் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி, பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.

ஐந்தாம் நாளான திங்கள்கிழமை அகிலாண்டேசுவரி அம்மன், சம்புகேசுவரா் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, தெருவடைச்சான் என்னும் சப்பரத்தில் வீதியுலா வந்தனா். ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

இதைத் தொடா்ந்து முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை 8 மணிக்கு நடைபெற்றது. முதலில் சுவாமி தேரும், அதைத் தொடா்ந்து அம்மன் தேரும் புறப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...