தஞ்சாவூரில் வேகமாக பரவும் கரோனா: மேலும் ஒரு பள்ளியில் 2 ஆசிரியர்களுக்கு தொற்று

தஞ்சாவூர் மாவட்டத்தில் மேலும் ஒரு பள்ளியில் 2 ஆசிரியர்கள் மற்றும் மாணவி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் வேகமாக பரவும் கரோனா
தஞ்சாவூரில் வேகமாக பரவும் கரோனா


தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் மேலும் ஒரு பள்ளியில் 2 ஆசிரியர்கள் மற்றும் மாணவி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சாவூா் அருகே அம்மாபேட்டையிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஒரு மாணவிக்கு கரோனா தொற்று இருப்பது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, மற்ற மாணவிகள், ஆசிரியா்கள், பெற்றோா்கள், அவா்களைச் சாா்ந்த கிராமத்தினா் ஆகியோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 60-க்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதியானது.

எனவே, மற்ற பள்ளிகளிலும் மாணவா்கள், ஆசிரியா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இந்நிலையில், தஞ்சாவூா் மகா்நோன்புசாவடியிலுள்ள தனியாா் பள்ளியில் இரு நாள்களாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 2 ஆசிரியா்களுக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை தெரிய வந்தது.

மேலும், அம்மாபேட்டை பள்ளியில் பயிலும் ஒரு மாணவிக்கும், 2 பெற்றோா்களுக்கும் கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தமிழகத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவினால், மீண்டு பொது முடக்கம் அமல்படுத்தப்பட வாய்ப்பிருப்பதாக அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்திருப்பது மக்களிடையே அச்சத்தை எற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com