4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

விலைவாசியை கட்டுப்படுத்த முடியாத ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது: ஸ்டாலின் 

விலைவாசியை கட்டுப்படுத்த முடியாத ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News image
Updated On :18 மார்ச் 2021, 10:36 am

DIN

விலைவாசியை கட்டுப்படுத்த முடியாத ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன், பொன்னேரியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் துரை சந்திரசேகரை ஆதரித்து பொதுமக்களிடையே வாக்கு சேகரித்து அவர் ஆற்றிய உரையில், நாம் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறப் போகிறோம் என்று சொன்னேன். இப்போது 5 நாட்களாக நான் தமிழகம் முழுவதும் சுற்றி வந்து கொண்டிருக்கும் இந்த பயணத்தில் நான் உணர்ந்ததை வைத்துச் சொல்கிறேன், 200 அல்ல 234 இடங்களிலும் நாம் தான் வெற்றி பெறப் போகிறோம்.

ஒரு இடத்தில் கூட பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. வெற்றி பெற்றுவிடக் கூடாது. அ.தி.மு.க. வெற்றி பெற்றால் அது பா.ஜ.க.வின் வெற்றி தான். 

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நடந்த போது, ஒரே ஒரு எம்.பி. அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்றார். அவர் இப்போது பா.ஜ.க. எம்.பி.யாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இதுதான் உண்மையான நிலை. இன்றைக்கு விலைவாசி என்ன நிலையில் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும்.

உளுத்தம் பருப்பு தி.மு.க. ஆட்சியில் ஒரு கிலோ 60 ரூபாய் - இப்போது 120, துவரம் பருப்பு தி.மு.க. ஆட்சியில் ஒரு கிலோ 38 ரூபாய் - இப்போது 120, கடலை பருப்பு தி.மு.க. ஆட்சியில் ஒரு கிலோ 34 - இப்போது 150, பாமாயில் ஒரு லிட்டர் தி.மு.க. ஆட்சியில் 48 - இப்போது 126, சர்க்கரை ஒரு கிலோ தி.மு.க. ஆட்சியில் 18 - இப்போது 40, சிலிண்டர் ஒன்று தி.மு.க. ஆட்சியில் 400 - இப்போது 900, பால் ஒரு லிட்டர் தி.மு.க. ஆட்சியில் 35 - இப்போது 60. இப்படி விஷம் போல ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசியை கட்டுப்படுத்த முடியாத ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.

தலைவர் கலைஞரின் இறுதி விருப்பம் பேரறிஞர் அண்ணாவின் அருகே ஓய்வெடுக்க வேண்டும் என்பதுதான். ஆனால் இந்த ஆட்சியாளர்கள் அதைச் செய்ய விடவில்லை. இதே பழனிசாமி வீட்டிற்கு நான் சென்றேன். கலைஞர் சாதாரண தலைவர் அல்ல, 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்திருக்கிறார். இந்திய நாட்டிற்கு பல ஜனாதிபதிகளை அடையாளம் காட்டியிருக்கிறார். பல பிரதமர்களை உருவாக்கி இருக்கிறார்.

அப்படிப்பட்ட தலைவர் கலைஞருக்கு ஆறடி இடம் கொடுக்க மறுத்தவர்கள். அதற்குப் பிறகு நாம் நீதிமன்றம் சென்று வெற்றி பெற்று அண்ணாவிற்கு பக்கத்தில் அவரை அடக்கம் செய்தோம் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.