திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தி.மு.க. கூட்டணிக்கு எம்.ஜி.ஆர். கழகம் ஆதரவு

நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு திரு. ஆர்.எம்.வீரப்பன் தலைமையிலான எம்.ஜி.ஆர். கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது.  

News image
Updated On :19 மார்ச் 2021, 10:19 am

DIN

நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு திரு. ஆர்.எம்.வீரப்பன் தலைமையிலான எம்.ஜி.ஆர். கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:- "எம்.ஜி.ஆர்.கழகம் தலைவர் திரு.ஆர்.எம்.வீரப்பனின் தலைமையில் மற்றும் பொதுச்செயலாளர் டிராமலிங்கம் முன்னிலையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வருகின்ற 6.4.2021-ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தினையும் மற்றும் அதன் தோழமைக் கட்சிகளையும் ஆதரிப்பதாக எம்.ஜி.ஆர்.கழகம் சார்பில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. 
மேலும், எம்.ஜி.ஆர்.கழக மாவட்ட செயலாளர்கள் - நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் தங்களுடைய பகுதியில் உள்ள தி.மு.கழக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுடன் இணைந்து கூட்டணி வெற்றி பெற முழு மனதுடன் பாடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இத்தகவலை திமுக உறுதிபடுத்தியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.