ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும்: கனிமொழி உறுதி
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆனைமலையாறு-நல்லாறு திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும் என்று கனிமொழி எம்.பி.உறுதியளித்துள்ளார்.


திருப்பூர்: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆனைமலையாறு -நல்லாறு திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும் என்று கனிமொழி எம்.பி. உறுதியளித்துள்ளார்.
தாராபுரம் தனி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கயல்விழியை ஆதரித்து திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. குண்டடத்தில் தேர்தல் பிரசாரத்தில் சனிக்கிழமை ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது: திமுக ஆட்சிக்கு வந்தவும் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை மாதந்தோறும் ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். 100 நாள் வேலை திட்டம் 150 நாள்களாக உயர்த்தப்படுவதுடன், நாள்தோறும் ரூ.300 ஊதியம் வழங்கப்படும். கிராமப்புற மகளிர் நகர்புறங்களில் அரசு பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம்.
இதற்காக வீட்டில் இருப்பவர்களிடம் பணம் கேட்க வேண்டாம். திமுக ஆட்சியில் கொடுத்த தொலைக்காட்சி பெட்டி பயன்பாட்டில் உள்ள நிலையில், அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட மிக்சி, கிரைண்டர் உபயோகத்தில் உள்ளதா என்று கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் 3 லட்சத்து 50 ஆயிரம் அரசு வேலைகள் வழங்கப்படும். ஒவ்வொரு எரிவாயு உருளைக்கும் ரூ.100 குறைக்கப்படும். மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் ரத்து செய்யப்படும். குண்டடத்தில் காய்கறி சந்தை அமைக்கப்படும். ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டின் ஆட்சியை தில்லியில் இருந்து நடத்தக்கூடாது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வரானால் தமிழ்நாட்டின் ஆட்சி தமிழ்நாட்டில் இருந்துதான் நடத்தப்படும்.
ஆகவே, இத்தகையை திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றால் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார். இந்த பிரசாரத்தின்போது, தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் கயல்விழி, காங்கயம் தொகுதி திமுக வேட்பாளர் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...