அமைச்சர் வேலுமணியின் வேட்புமனுவில் குளறுபடி: திமுக வேட்பாளர் புகார்

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த வேட்புமனுவில் குளறுபடிகள் உள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி புகார் அளித்துள்ளார். 
அமைச்சர் வேலுமணியின் வேட்புமனுவில் குளறுபடி: திமுக வேட்பாளர் புகார்
அமைச்சர் வேலுமணியின் வேட்புமனுவில் குளறுபடி: திமுக வேட்பாளர் புகார்

கோவை: கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த வேட்புமனுவில் குளறுபடிகள் உள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி புகார் அளித்துள்ளார். 

தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் வேட்புமனு மீதான பரிசீலனை நடந்து வருகிறது. இந்த நிலையில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேட்புமனுவில் குளறுபடிகள் உள்ளதாக கூறி திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்தார். 

பின் செய்தியாளரிடம் பேசிய அவர், தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த வேட்புமனுவில் வருமானம் தொடர்பான ஆவணங்களில் குறைபாடுகள், குறைகள் உள்ளன. தேர்தல் ஆணையம் அதை கண்டறிந்து வேலுமணியின் மனுவை நிராகரிக்க வேண்டும் என தெரிவித்தார். 

மேலும்  2016 - 17 காலகட்டத்தில் எப்படி வருமானம் வந்தது என்பதற்கான உரிய ஆவணங்கள் இல்லை, அவரது மனைவி வருமானத்தில் ஒரே ஆண்டில் ரூ.70 லட்சம் வருமானம் கூடி உள்ளது. மனைவி வேலைக்குச் செல்லாதவர் என காட்டிய நிலையில் எப்படி வருவாய் வந்தது என கேள்வி எழுப்பினார். ஆனால் தேர்தல் ஆணையம் முறையான பதில் கூறவில்லை, தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக நடப்பது வருத்தமளிக்கிறது. 

இது ஜனநாயக மரபுக்கு எதிரானது எனக் கூறினார், அமைச்சர் மகன் ஆஸ்திரேலியாவில் ஹெலிகாப்டரில் பயணம் செய்வது போன்ற படத்தை அவர் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். வருமானம் இல்லை என காட்டிய நிலையில் அவர் எப்படி ஹெலிகாப்டரில் செல்ல முடியும், 
இப்படி அராஜகமாக அவர் செயல்படுவதை மக்கள் உணர்ந்து விட்டார்கள் என்பதை காண முடிகிறது. வரும் தேர்தலில் நல்ல மாற்றம் தமிழகத்திற்கு ஏற்படுவது நிச்சயம், தொண்டாமுத்தூரிலும் மாற்றம் ஏற்படுவது நிச்சயம் எனக் கூறி உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com