மன்னார்குடி கோயிலில் பங்குனித் தேரோட்டம்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் நடைபெறும் பங்குனித் திருவிழாவினையொட்டி, திருத்தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மன்னார்குடி கோயிலில் பங்குனித் தேரோட்டம்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் நடைபெறும் பங்குனித் திருவிழாவினையொட்டி, திருத்தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா, கடந்த மார்ச் 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் உத்ஸவர் ராஜகோபாலசுவாமி கண்ணன், மரவுரிராமர், பட்டாபிராமர், வேணுகோபாலர், ராமர் கோலங்களிலும், ராஜ அலங்காரத்திலும் பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்வுகளாக, கண்டபேரண்ட பக்ஷி, சூரிய பிரபை, கோரதம், வெண்ணைய்த்தாழி, தங்க வெட்டுங்குதிரை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 17-ஆம் நாள் திருத்தேரோட்ட விழாவினையொட்டி வெள்ளிக்கிழமை ரதா ரோஹணத்தில் கல்யாண திருக்கோலத்தில் ருக்மணி, சத்யபாமா சமேதராக ராஜகோபாலசுவாமி அருள்பாலித்தார்.

இதனைத் தொடர்ந்து 51 அடி உயரமும், 36 அடி சுற்றளவில், 55 டன் எடைகொண்ட தேரில், 50 அடிக்கு இரண்டு கயிறு வடமும், இரண்டு சங்கிலி வடமும் இணைக்கப்பட்டு, மலர்களாலும், வண்ணத்துணிகளும் அலங்கரிக்கப்பட்ட தேரில், ராஜகோபாலசுவாமி, ருக்மணி, சத்யபாமா சமேதராக எழுந்தருளி, கோபாலசமுத்திரம் கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி எனக் கோயிலின் நான்கு வெளிப்பிரகாரங்களை உத்ஸவராக ஒருமுறை வலம் வந்து பக்தர்களுக்கு அருளினர்.

மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பக்தர்கள் தேர்வடம் பிடித்தனர். இதற்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகத்தினர், டி.என்.சி.எஸ் அலுவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com