ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண கொடியேற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருக்கல்யாணம் வருகிற 28-ஆம் தேதி இரவு 7 மணி முதல் 8 மணி வரை கோயில் முன்புள்ள ஆடிப்பூர கொட்டகையில் வைத்து நடைபெற உள்ளது.

இதற்கான கொடியேற்ற விழா சனிக்கிழமை கோவிலில் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து கோயில் வளாகம் மற்றும் கொடிமரம் அமைந்துள்ள பகுதிகளில் வண்ண வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

கொடி ஏற்றப்படுவதற்கு முன் கொடி பட்டத்திற்குச் சிறப்புப் பூஜை நடத்தப்பட்டு மாட வீதிகள் 4 ரத வீதிகள் வழியாக கொடிப் பட்டம் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டு கொடிமரத்தில் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது கொடியை அர்ச்சகர் வாசுதேவன் ஏற்றினர்.  இந்த நிகழ்ச்சியில் தக்கார் ரவிச்சந்திரன் நிர்வாக அதிகாரி இளங்கோவன் காவல் துணைக் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

கொடியேற்ற நிகழ்வை முன்னிட்டு ஆண்டாளும் ரெங்கமன்னாரும் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தனர். இதைத் தொடர்ந்து தினமும் ஆண்டாள் ரங்க மன்னார் வீதி உலா நிகழ்ச்சிகளும் பல்வேறு மண்டபங்களில் எழுந்தருள உள்ளனர்.

விழாவின் முக்கிய நிகழ்வாக திருக்கல்யாண விழா 28ஆம் தேதி இரவு 7 முதல் 8 மணிக்குள் நடைபெறுகிறது அன்று காலை  செப்பு தேரோட்டம் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com