அப்போதைய முதல்வர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கொண்டுவரப்படும் என்று கூறினார் ஆனால் அது அமைக்கப்படவில்லை. திமுக ஆட்சி அமைந்ததும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும். மேலும் திருவெறும்பூர் பகுதியில் திமுக ஆட்சிக்காலத்தில் தான் சர்வதேச விமான நிலையம் விரிவாக்கம் மற்றும் தாலுகா அலுவலகம், டைடல் பார்க், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், அண்ணாமலை பல்கலைகழகம், ஐடிஐ, ஐஏஎம், நவல்பட்டில் சமத்துவபுரம், எஸ்சி மற்றும் பி சி மாணவர்கள் தங்கும் விடுதி என அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டன. திமுக ஆட்சியில் இல்லாத காலத்தில் எம்எல்ஏவாக உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது தொகுதி வளர்ச்சி நிதியில் எதைச் செய்ய வேண்டுமானாலும் அதற்குப் போராடித்தான் செய்ய வேண்டியுள்ளது.