பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

கம்பத்தில் சாந்த காளியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா

தேனி மாவட்டம் கம்பத்தில் சாந்த காளியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா நடைபெற்றது.

News image
Updated On :25 மார்ச் 2021, 9:49 am

DIN

தேனி மாவட்டம் கம்பத்தில் சாந்த காளியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா நடைபெற்றது.

இரண்டு நாள்கள் நடைபெற்ற திருவிழாவில் முதல் நாள் அதிகாலையிலேயே பெண்கள் குடும்பத்துடன் வந்து பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சாந்த காளியம்மன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார், அனைத்து பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.

விழாவினைத் தொடர்ந்து, விரதமிருந்த பெண் பக்தர்கள் புதன் கிழமை இரவு மேளதாளம் முழங்க முளைப்பாரி எடுத்து கள்ளர் பள்ளி தெரு, மெயின் ரோடு, வடக்கு காவல் நிலையம், போக்குவரத்து சிக்னல், காந்தி சிலை வழியாக ஊர்வலமாக வந்து சுருளிப் பட்டி சாலை தொட்டன்மான் துறை அருகே முல்லைப் பெரியாற்றில்  கரைத்தனர்.

விழா ஏற்பாடுகளை கம்பம் வடக்கு ராஜகுல அகமுடையார் சமுதாய நிர்வாகிகள், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.