3 மணி நிலவரம்: திமுக கூட்டணி 3, அதிமுக 1 இடத்தில் வெற்றி

பிற்பகல் 3 மணி நிலவரப்படி 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ள திமுக கூட்டணி 151 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
3 மணி நிலவரம்: திமுக கூட்டணி 3, அதிமுக 1 இடத்தில் வெற்றி
3 மணி நிலவரம்: திமுக கூட்டணி 3, அதிமுக 1 இடத்தில் வெற்றி

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ள திமுக கூட்டணி 151 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

திமுக மொத்தம் போட்டியிட்ட 173 தொகுதிகளில் 119 தொகுதிகளிலும், காங்கிரஸ் போட்டியிட்ட 25 தொகுதிகளில் 16 தொகுதிகளிலும், மதிமுக, விசிக தலா 4 தொகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் தலா 2 இடங்களிலும், கொமதேக 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளன.

அதிமுக தலைமையிலான கூட்டணியில், அதிமுக போட்டியிட்ட 179 தொகுதிகளில் 74 தொகுதிகளிலும், 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 6 தொகுதிகளிலும், 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 3 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

கோவை தெற்கு தொகுதியில் கமல் முன்னிலையில் உள்ளார். அதன்படி, மக்கள் நீதி மய்யம் கட்சி தான் போட்டியிட்ட 142 தொகுதியில் ஓரிடத்தில் முன்னிலையில் உள்ளது.

அமமுகவும், நாம் தமிழர் கட்சியும் இதுவரை தங்களது முன்னிலைக் கணக்கைத் தொடங்காமல் உள்ளன.

கீழ்வேளூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார்.  நாகை மாவட்டம், கீழ்வேளூர் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நாகை மாலி வெற்றி பெற்றார். 

வால்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி வெற்றி பெற்றுள்ளார். முதல் வெற்றியை பதிவு செய்தது அதிமுக . 

தனித்தொகுதியான வால்பாறையில் அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமியை எதிர்த்து திமுக கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆறுமுகம் போட்டியிட்டார். இந்நிலையில் ஆறுமுகத்தை காட்டிலும் அமுல் கந்தசாமி 13 ஆயிரத்து 171 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளாத்திகுளம் தொகுதியில் 23 சுற்றுகள் முடிவில்  திமுக வேட்பாளர் ஜீவி மார்க்கண்டேயன் 89130 வாக்குகள் பெற்று வெற்றி.  37893 வாக்குகள் வித்தியாசத்தில் விளாத்திகுளத்தில் திமுக வேட்பாளர் ஜீ.வி மார்க்கண்டேயன் அமோக வெற்றி.

நீலகிரி மாவட்டத்தில் உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.கணேஷ் குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கா. ராமச்சந்திரன் மற்றும் கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொன் ஜெயசீலன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர் இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியிடப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com