தமிழக அமைச்சரவையில் 15 புதுமுகங்கள் யார் யார்?

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் புதிய அமைச்சர்களாக 15 பேர் இடம்பெறவுள்ளனர். 
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வராக பதவியேற்கவிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில், புதிய அமைச்சர்களாக 15 பேர் இடம்பெறவுள்ளனர். முதல்வர் ஸ்டாலினையும் சேர்த்து மொத்தம் 34 அமைச்சர்கள் இடம்பெறவுள்ள நிலையில் இதில் 19 பேர் மூத்த அமைச்சர்களாகவும், 15 பேர் புதிய அமைச்சர்களாகவும் இடம்பெறுகின்றனர். 

புதிதாக அமைச்சரவையில் இடம்பெறுவோர்

1. அர. சக்கரபாணி - உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலைக்கட்டுப்பாடு

2. ஆர். காந்தி - கைத்தறி மற்றும் துணிநூல்

3. மா. சுப்பிரமணியம் - மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன்

4. பி. மூர்த்தி - வணிக வரிகள், பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம், 

5. எஸ்.எஸ். சிவசங்கர் - பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன்

6. பி.கே. சேகர் பாபு - இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை 

7. பழனிவேல் தியாகராஜன் - நிதித்துறை திட்டம் மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை

8. சா.மு.நாசர் - பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சி

9. செஞ்சி கே.எஸ்.மஸ்தான் - சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை 

10. அன்பில் மகேஷ் பொய்யாமொழி - பள்ளிக் கல்வித் துறை

11. சிவ.வீ. மெய்யநாதன் - சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை

12. சி.வி.கணேசன் - தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத் துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, 

13. த.மனோ தங்கராஜ் - தகவல் தொழில்நுட்பத் துறை

14. மா.மதிவேந்தன் - சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகத் துறை 

15. என்.கயல்விழி செல்வராஜ் - ஆதிதிராவிடர் நலத்துறை 

மூத்த அமைச்சர்களில் வி. செந்தில் பாலாஜி முன்னதாக ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். முதல்முறையாக திமுக ஆட்சியில் அமைச்சராக இடம்பெறுகிறார். 

அதேபோன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும்  இருந்துள்ளார். இதர அமைச்சர்களும் ஏற்கெனவே கருணாநிதி அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com