47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

எதிர்க்கட்சித் தலைவர் தேர்வில் நீடிக்கும் இழுபறி: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஒத்திவைப்பு

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் மீண்டும் திங்கள்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :7 மே 2021, 4:08 pm

DIN

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் மீண்டும் திங்கள்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் தலைமைக் கழகத்தில் வரும் 10ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனிடையே அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் தோல்விக்கான காரணங்கள், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து காரசார விவாதம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 4 மணிநேரம் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு ஏதும் எடுக்கப்படாததால் கூட்டம் மீண்டும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கூட்டத்தை தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினர். அப்போது ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பியதால் சற்று பரபரப்பு நிலவியது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.