ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஆளுநர் மாளிகை தேநீர் விருந்து: ஒரே மேஜையில் ஸ்டாலின், ஓ. பன்னீர்செல்வம்

தேநீர் விருந்தில், ஒரே மேஜையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து தேநீர் அருந்தினர்.

News image
ஆளுநர் மாளிகை தேநீர் விருந்து: ஒரே மேஜையில் ஸ்டாலின், ஓ. பன்னீர்செல்வம்
Updated On :7 மே 2021, 9:41 am

DIN


சென்னை: தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு, ஆளுநர் மாளிகையில் அளிக்கப்பட்ட தேநீர் விருந்தில், ஒரே மேஜையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து தேநீர் அருந்தினர்.

தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்கும் நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவையொட்டி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேநீர் விருந்து அளித்தார்.

இந்த தேநீர் விருந்தில், முதல்வராக பதவியேற்றுக் கொண்ட மு.க. ஸ்டாலின், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், புதிதாக பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் சட்டப்பேரவை தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ப. தனபால், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

YouTube video thumbnail

இந்த நிகழ்வில், ஒரே மேஜையில், ஆளுநருடன், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், முன்னாள் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், சட்டப்பேரவை முன்னாள் தலைவர் தனபால் ஆகியோர் அமர்ந்து தேநீர் அருந்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.