கட்டணமில்லாப் பேருந்து பயணம்: பேருந்துகளில் ஸ்டிக்கர்; மகளிர் மகிழ்ச்சி
நகரப் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லாப் பேருந்து பயணம் திட்டம் இன்று காலை முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் நிலையில், அந்த அறிவிப்பு ஸ்டிக்கருடன் பேருந்துகள் இயங்கின.


நகரப் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லாப் பேருந்து பயணம் திட்டம் இன்று காலை முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் நிலையில், அந்த அறிவிப்பு ஸ்டிக்கருடன் பேருந்துகள் இயங்கின.
தமிழக முல்வர் ஸ்டாலின் நேற்று உத்தரவு பிறப்பித்த நிலையில், இன்று காலையிலேயே, சாதாரணக் கட்டணப் பேருந்துகளில், இது சாதாரணக் கட்டணப் பேருந்து, மகளிருக்கு கட்டணமில்லை என்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.
சாதாரண கட்டணப் பேருந்துகளில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த மகளிர், மகிழ்ச்சி அடைந்தனர். பணி மற்றும் பல்வேறு காரணங்களுக்காக பேருந்துகளில் பயணிக்கும் மகளிர், தங்களுக்கு பயணச் செலவு குறைந்ததாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர.
தமிழகம் முழுவதும் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்வதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் கையெழுத்திட்டாா்.
இந்த உத்தர்வுக்கு வேலைக்குச் செல்லும் மகளிா் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
திமுக தோ்தல் வாக்குறுதியை செயலாக்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்துக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிா், உயா்கல்வி பயிலும் மாணவியா் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் சனிக்கிழமை முதல் பயணம் செய்ய முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளாா்.
இதன் மூலம் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவுத் தொகையான ரூ. 1,200 கோடியை மானியமாக வழங்கி அரசு ஈடுகட்டும் என தெரிவித்துள்ளாா்.
கூலி வேலை மற்றும் மிகக் குறைந்த ஊதியத்துக்கு தொழிற்சாலைகளில் வேலைக்குச் செல்லும் பெண்கள், பயணச் செலவுக்கே அதிகம் செலவிட்டு வந்த நிலையில், தற்போது அவர்களுக்கு இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவா்களின் சம்பளத்தில் பெரும் பகுதி பேருந்து பயணத்திற்கே செலவானது. தற்போது தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மகளிா் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளதை பெண்கள் வரவேற்றுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...