காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு விலகல்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ் பாபு விலகுவதாக அறிவித்துள்ளார். 

News image
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அருகில் தலைமை அலுவலக பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு.
Updated On :13 மே 2021, 8:05 am

DIN

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ் பாபு விலகுவதாக அறிவித்துள்ளார். 

தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் கட்சியில் இருந்து விலகுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து ஆர். மகேந்திரன், முருகானந்தம் உள்ளிட்டோர் விலகினர். கமல், தமிழகத்தை செயற்படுத்துவதற்கு முன்னர் கட்சியை சீர்படுத்த வேண்டும் என்று டாக்டர் ஆர். மகேந்திரன் கூறியிருந்தார். 

இந்நிலையில், கட்சியின் பொதுச் செயலாளரான சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினர் மற்றும் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன். இது தனிப்பட்ட காரணங்களுக்காக எடுக்கப்பட்ட முடிவு. கமல் மற்றும் கட்சியினர் காட்டிய பாசத்திற்கும் நட்பிற்கும் நன்றி எனப் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.