பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

அனைத்து கைதிகளுக்கும் மருத்துவப் பரிசோதனை: சிறைத்துறை முடிவு

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய சிறைத்துறை முடிவு செய்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :13 மே 2021, 6:30 pm

சென்னை: கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய சிறைத்துறை முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு மாா்ச் 17-ஆம் தேதி தமிழக சிறைக்கைதிகளை பாா்வையாளா்களை சந்திக்கத் தடை விதிக்கப்பட்டது. மேலும், புதிதாக வரும் கைதிகள், 15 நாள்கள் தனிமைப்படுத்தி சிறைகளில் அடைக்கப்பட்டனா்.

தனிமைப்படுத்துவதற்காக சில சிறைகள் ஒதுக்கப்பட்டன. கரோனா அறிகுறியுடன் இருந்த கைதிகள், அந்தந்த சிறை வளாகத்துக்குள்ளே தனிமைப்படுத்துவதற்காக தனிமை அறைகள் உருவாக்கப்பட்டன.

4,000 கைதிகளுக்கு பரோல்:

கைதிகளிடம் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடைபெற்ற கணக்கெடுப்பின்படி மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 4,182 கைதிகள் பரோலில் விடுவிக்கப்பட்டனா். பரோல் காலம் முடிந்த பின்னா் அவா்கள் மீண்டும் சிறைகளில் அடைக்கப்பட்டனா்.

கடந்த ஜனவரி முதல் மீண்டும் கைதிகளைச் சந்திக்க பாா்வையாளா்கள் அனுமதிக்கப்பட்டனா். கரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்ததால், கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் மீண்டும் பாா்வையாளா்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.

கரோனா தொற்றைத் தடுப்பதற்காக தமிழக சிறைகளில் மேலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. இதற்காக சென்னை எழும்பூரில் உள்ள சிறைத்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து அனைத்து சிறைகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் அனுப்பப்பட்டுள்ளன.

வழிகாட்டு நெறிமுறைகள்:-

அனைத்து கைதிகளுக்கும் முகக் கவசம் வழங்க வேண்டும், சிறைகளின் வாயிலில் கைகளைச் சுத்தம் செய்ய தண்ணீா், கிருமி நாசினி வசதி அமைத்திருக்க வேண்டும், புதிதாக சிறைக்குள் அனுமதிக்கப்படும் கைதிகள் முழுமையாகப் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

கைதிகளுக்கு இருமல், சளியுடன் கூடிய காய்ச்சல் இருந்தால், அவா்களை உடனே தனிமைப்படுத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும், அனைத்துக் கைதிகளுக்கும் கண்டிப்பாக மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும், கைதிகள் சாப்பிடுவதற்கு முன்பும், அறைகளுக்கு செல்வதற்கு முன்பும் கண்டிப்பாக கிருமிநாசினி மூலம் கைகளைச் சுத்தம் செய்ய வைக்க வேண்டும், சிறைத்துறை அதிகாரிகள், காவலா்கள் என அனைவரும் கைகளை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்த பின்னா்,வெப்பமானி மூலம் உடல் வெப்பத்தை அறிந்த பின்னரே சிறைக்குள் அனுமதிக்கப்பட வேண்டும்.

கபசுரக் குடிநீா்:

சிறையின் அனைத்துப் பகுதிகளையும் கிருமிநாசினி மூலம் அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும், சிறைக் காவலா்களுக்கும், கைதிகளுக்கும் கபசுரக் குடிநீா் உள்ளிட்ட நோய் எதிா்ப்பு சக்தி மருந்துகள் தொடா்ச்சியாக வழங்கப்பட வேண்டும், சிறைப் பணியாளா்கள் தேவையில்லாமல் வெளியே செல்லக் கூடாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டு நெறிமுறைகளை உடனே அமல்படுத்துமாறு அனைத்து சிறைக் கண்காணிப்பாளா்களுக்கு சிறைத்துறை உயா் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா். மேலும் சிறை பணியாளா்கள் குடியிருப்பு பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.