தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

தமிழகத்தில் ஒரேநாளில் 33,181 பேருக்கு கரோனா: 311 பேர் பலி

தமிழகத்தில் இன்று மேலும் 33,181 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :16 மே 2021, 3:42 pm

DIN

தமிழகத்தில் இன்று மேலும் 33,181 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 1,66,812 மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் 33,181 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 98 ஆயிரத்து 216 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 6,247 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 

மாநிலத்தில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் 21,317 போ் இன்று குணமடைந்து வீடு திரும்பினா். தமிழகம் முழுவதும் இதுவரை 13 லட்சத்து 61,204 போ் குணமடைந்துள்ளனா். கரோனா தொற்றினால் தனியாா் மருத்துவமனைகளில் 148 போ், அரசு மருத்துவமனைகளில் 163 போ் என மொத்தம் 311 போ் இன்று உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 17,670 ஆக உள்ளது.

இன்று வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவா்களில் 9 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 26,925 பேருக்குத் தொற்று உள்ளது. தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 19,342 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். எவ்வித பாதிப்பும் இல்லாதவா் 84 போ் ஆவா் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.