மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தொடர்பான கூட்டத்தை தமிழகம் புறக்கணித்ததா என்பதற்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பா, திருச்சியில் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கூறியது:
புதிய கல்வி கொள்கை குறித்த மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகள் மட்டும் பங்கேற்க வேண்டும் என்ற அறிவிப்பு கூட்டாட்சி தத்துவத்திற்கு வேட்டு வைப்பது போல் இருப்பதாக தமிழக முதல்வர் கூறியுள்ளார்.
கூட்ட அறிவிப்பு குறித்து நாங்கள் மின்னஞ்சலில் அனுப்பி இருந்தோம். ஆனாலும் எவ்வித பதிலும் வரவில்லை. எனவே கூட்டத்தில் பங்கேற்கவில்லை இதனால் நாங்கள் கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என புரிந்து கொள்ளக் கூடாது.
கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட மெயிலுக்கு எவ்வித பதிலும் வரவில்லை. பதில் வரும் என எதிர்பார்க்கிறோம்.
வராத பட்சத்தில் தில்லிக்கு சென்று எங்களுடைய கருத்துகளை முன்வைக்க உள்ளோம். புதிய கல்வி கொள்கை பாதகமானது. குலக்கல்வித் திட்டத்தை நினைவுபடுத்துகிறது.
இதனை நாங்கள் அரசியலாக பார்க்கவில்லை. மாணவர் நலனே முக்கியம். மோதல் போக்குடன் இல்லாமல் மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட விரும்புகிறோம்.
நாங்கள் சொல்லும் திருத்தங்களை ஏற்றுக் கொண்டால் புதிய கல்விக் கொள்கையை ஏற்போம். புதிய கொள்கையில் மும்மொழி கல்வித் திட்டத்தை ஏற்பதாக இல்லை.
இருமொழி கொள்கையே அண்ணாவின் கொள்கை. சட்டமன்றத்தில் முதல் குரலாக நீட்டுக்கு எதிராக எங்கள் குரல் எதிரொலிக்கும். இது குறித்து ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் மீண்டும் இந்த தீர்மானம் வலியுறுத்தப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஆா். நல்லகண்ணு மறைவு: புதுச்சேரியில் அமைதி ஊா்வலம்

விதிகளை மீறி இயங்கும் சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி மறியல் : புதுச்சேரியில் 200 போ் கைது

புதுச்சேரியில் தே.ஜ.கூட்டணிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது: வே.நாராயணசாமி விமா்சனம்

புதுச்சேரியில் மாா்ச் 4-இல் ஸ்ரீநிவாஸ பெருமாள் திருக்கல்யாணம்
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

