பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

தமிழகத்தில் ஒரே நாளில் 36,184 பேருக்கு கரோனா; 467 போ் பலி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 36,184 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :21 மே 2021, 2:16 pm

DIN

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 36,184 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், மாநிலத்தில் இன்று 1,74,112 பேருக்கு மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் புதிதாக 36,184 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 5,913 போ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

அதற்கு அடுத்தபடியாக கோவையில் 3,243 பேருக்கும், செங்கல்பட்டில் 2,226 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 24,478 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா்.

இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 14 லட்சத்து 76,761 -ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 2 லட்சத்து 74,629 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 467 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19,598-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.