பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

அண்ணா நகரில் 5,000-யைத் தாண்டிய கரோனா: சென்னை மண்டலவாரியாக விவரம்

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 47,667 ஆக உள்ளது. 

News image

சென்னையில் கரோனா பாதிப்பு

Updated On :21 மே 2021, 6:52 am

DIN

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 47,667 ஆக உள்ளது. 

சென்னை மாநகராட்சி இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள கரோனா பாதிப்பு நிலவரப்படி சென்னையில் மொத்த கரோனா பாதிப்பு 4,62,448 ஆகவும் தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 47,667 ஆகவும்  அதிகரித்துள்ளது.

சென்னையில் இதுவரை கரோனாவுக்கு 6,105 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 4,08,676 பேர் குணமடைந்துள்ளனர். 

நேற்று(மே 20) மட்டும் 31,252 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரத்தையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக அண்ணா நகரில் கரோனா பாதிப்பு 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.  கோடம்பாக்கம், அம்பத்தூர் அடையாறில் கரோனா பாதிப்பு 4 ஆயிரத்தைத் தாண்டி பதிவாகியுள்ளது. 

அதேபோன்று சென்னையில் நேற்று (மே 20) 22,910 பேர் உள்பட இதுவரை 17,80,217 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

மண்டலவாரியாக கரோனா பாதிப்பு

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.