கரோனா பெருந்தொற்று அளவிற்கு கருப்பு பூஞ்சை நோயாளர்களின் எண்ணிக்கை இல்லாவிடினும் இந்த பூஞ்சையின் வீரியம் மற்றும் நோயின் தீவிரத்தன்மை, நோயாளர்களில் பலருக்கு உயிரிழப்புகளை அதிவிரைவில் ஏற்படுத்திவிடும் அபாயம் உள்ளது. இந்த நோய் குறித்து பல மருத்துவர்களிடம் ஆலோசித்து அதிலும் மரு. வெங்கடேஷ் பிரஜ்னா, மூத்த மருத்துவர், அரவிந்த் கண் மருத்துவமனை மதுரை (உலகின் பெரிய மற்றும் தலைசிறந்த கண்மருத்துவமனை ஆன அரவிந்த் மருத்துவமனையின் ஒரு தலைமை மருத்துவர்) அவர்களிடம் ஆலோசித்தபோது இதற்கு தேவையான மருந்து 'லிபோசோமல் அம்போடேரிசின் பி' என்பது தெரிய வந்தது. இந்த தொற்றுக்கான மருந்து இது தான் என்பதையும் பத்மஸ்ரீ மரு அசோக் குரோவர், தலைமை கண் மருத்துவர், கங்காராம் கண் மருத்துவமனை, புதுதில்லி அவர்களிடமும் பேசி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிய வருகிறேன்.