திருப்பூரில் ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து திருப்பூரில் ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
திருப்பூர் பட்டுக்கோட்டையார் நகரில் புதன்கிழமை கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர்.
திருப்பூர் பட்டுக்கோட்டையார் நகரில் புதன்கிழமை கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர்.


திருப்பூர்: மத்திய அரசைக் கண்டித்து திருப்பூரில் ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.

திருப்பூர் பட்டுக்கோட்டையார் நகர்  பகுதியில் ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்று. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளர் என்.சேகர் தலைமை வகித்தார். 

இதில், பங்கேற்ற தொழிற்சங்கத்தினர் கூறியதாவது: மத்திய அரசின் வேளாண் திருத்தச்சட்டத்தை திரும்பப்பெறக்கோரி தில்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு 6 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. இதனைக் கருப்பு தினமாக அனுசரிக்கக்கோரி அகில இந்திய போராட்டக்குழு சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஆகவே, வேளாண் திருத்தச்சட்டஙகளை மத்திய அரசு திரும்பப்பெற வேணடும். கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ.7,500 உதவித் தொகை வழங்க வேண்டும் என்றனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில், பனியன் சங்க பொதுக்குழு உறுப்பினர் ராஜன், கிளை தலைவர் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதே போல ஊத்துக்குளியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் தலைமை வகித்தார். மேலும், திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com