கோவை செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று குறையாததை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று அங்கு ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறார். 
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று குறையாததை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று அங்கு ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறார். 

இதற்காக நாளை மறுநாள்(மே 30) கோவைக்குச் சென்று அங்கு பல்வேறு இடங்களில் அவர் நேரடியாக ஆய்வு மேற்கொள்கிறார். 

முன்னதாக, சென்னையைவிட கோவை மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்துக் காணப்படுகிறது. நேற்று கோவை மாவட்டத்தில் 4,734 பேருக்கு தொற்று உறுதியானது, 32 பேர் உயிரிழந்தனர். 

மேலும் கோவை, திருச்சி உள்ளிட்ட கரோனா பரவல் குறையாத ஆறு மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தியதுடன் அந்த 3 மாவட்டங்களுக்கு சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து கரோனா தடுப்பு நடவடிக்களுக்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். 

அதன்படி கோவைக்கு கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக சித்திக் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று கோவை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com