மேலும், பத்திரிகைத் தகவல் அலுவலகம் புத்தக நிலையம், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், பரிசல் புத்தக நிலையம் ஆகிய நிறுவனங்களின் பங்களிப்புகளும், தட்சிண சித்ரா குழுவினரால் அமைக்கப்பட்டுள்ள விடுதலைப் போராட்டம் பற்றிய அருமையான பழைய மண் பொம்மைகள், ஒலியோகிராப் படங்கள், மரத்திலான இராட்டை போன்றவைகள், தமிழ்நாடு அரசு ஆவண காப்பகத்தின் மூலம் கட்டபொம்மன் தூக்கிலிட்டது குறித்து கிழக்கிந்திய கம்பெனிக்கு பானர்மேன் கொடுத்த அறிக்கை, மருது பாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட விசாரணை ஆவணங்கள், ஆஷ்துரை கொலை வழக்கு பற்றிய ஆவணம், நீல் சிலை உடைப்பு குறித்த ஆவணம், வ.உ.சி. வழக்கு (திருநெல்வேலி சதி வழக்கு) ஆவணங்கள், செஞ்சிக் கோட்டை மற்றும் இதர கோட்டையின் நிலவரைகள், வேலூர் சிப்பாய் கலகம் பற்றிய வரலாற்று ஆவணங்கள் குறித்த புகைப்படங்களும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.