கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

தீபாவளி பண்டிகை: சங்ககிரியில் பெருமாள் சுவாமிகளுக்கு புத்தாடைகள் அணிவித்து சிறப்பு பூஜை

தீபாவளி பண்டிகையையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு சென்னசேகவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சுவாமிகள்

News image
தீபாவளி பண்டிகையையொட்டி வியாழக்கிழமை சங்ககிரி அருள்மிகு சென்னகேவசப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சுவாமிகளின் உற்சவமூர்த்திகளுக்கு புத்தாடைகளை அணிவித்து செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
Updated On :28 ஜனவரி 2024, 4:31 am

DIN

சங்ககிரி: தீபாவளி பண்டிகையையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு சென்னசேகவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சுவாமிகள் உள்பட நகரில் உள்ள பல்வேறு  பெருமாள் கோயில்களில் சுவாமிகளுக்கு புத்தாடைகள் அணிவித்து வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 

Story image

சங்ககிரி,  வி.என்.பாளையத்தில் உள்ள அருள்மிகு வஸந்தவல்லபராஜ பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள அருள்மிகு தபால் ஆஞ்சநேயர் சுவாமிக்கு தீபாவளி பண்டிகையையொட்டி வியாழக்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.

தீபாவளி பண்டிகையையொட்டி  சங்ககிரி மலை மீது உள்ளஅருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி, மலையில் அடிவாரத்தில் உள்ள அருள்மிகு வரதராஜப்பெருமாள், சங்ககிரி வி.என்.பாளையத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வஸந்தவல்லி உடனமர் ஸ்ரீ வஸந்தவல்லபராஜபெருமாள், அருள்மிகு தபால் ஆஞ்சநேயர் சுவாமிகள் உள்பட அனைத்து மூலவர் சுவாமிகளுக்கும் வியாழக்கிழமை அதிகாலை எண்ணெண்ணை காப்பு வைத்து, சீகக்காய் தூள், பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்யபொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு புத்தாடைகள் அணிவித்து, பல்வேறு மலர்கள், வெட்டி வேர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. மலை மீது உள்ள அருள்மிகு சென்னகேவசப்பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள திருக்கோடி விளக்கு ஏற்றப்பட்டது.  

Story image

தீபாவளி பண்டிகையையொட்டி வியாழக்கிழமை  அதிகாலை சங்ககிரி மலை மீது உள்ளஅருள்மிகு சென்னகேசவப்பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள ஏற்றப்பட்ட திருக்கோடி விளக்கு.

மேலும் வி.என்.பாளையம் அருள்மிகு ஸ்ரீ வஸந்தவல்லபராஜ பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி, ஸ்ரீவஸந்தவல்லி உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவி,  அருள்மிகு வரதராஜபெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி, ஆஞ்சநேயர், ஸ்ரீசக்கரம் உள்ளிட்ட பல்வேறு சுவாமிகளின் உற்சவமூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு புத்தாடைகள் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.  

இக்கோயில் வளாகத்தில் அருள்மிகு சென்னகேசவப்பெருமாள், அருள்மிகு வரதராஜப்பெருமாள், அருள்மிகு வஸந்தவல்லப ராஜபெருமாள் சுவாமிகளின் மூலவர் சுவாமிகளுக்கு தீபாவளி பண்டிகையன்று மட்டும் ஒரே இடத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன என கோயில் அர்ச்சகர் தெரிவித்துள்ளார். 

சுவாமிகளை அதிகாலை முதலே பக்தர்கள் குடும்பத்துடன் வணங்கிச் சென்றனர்.

சங்ககிரி அருள்மிகு சென்னகேவசப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சுவாமிகளின் உற்சவமூர்த்திகள் உள்பட பல்வேறு சுவாமிகளின் உற்சவமூர்த்திகளுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி வியாழக்கிழமை புத்தாடை களை அணிவித்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.