நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அடுத்தடுத்து அச்சுறுத்தும் வானிலை: நவ. 13ல் புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு

வரும் 13ஆம் தேதி மேலும் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

News image

அடுத்தடுத்து அச்சுறுத்தும் வானிலை: நவ. 13ல் புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு

Updated On :10 நவம்பர் 2021, 8:00 am

சென்னை: ஏற்கனவே வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி சென்னை நோக்கி நகரும் என்பதால் மக்கள் அச்சத்தில் இருக்கும் நிலையில், வரும் 13ஆம் தேதி மேலும் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தற்போது வங்கக் கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது. இது தென் மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகத்துக்கு அருகே கரையை கடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினம், திருப்பூண்டியில் (நாகை) அதிகளவாக தலா 31 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

ஏற்கனவே வங்கக் கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அச்சுறுத்தி வரும் நிலையில், வங்கக் கடலில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நவம்பர் 13ஆம் தேதி புதிதாக காற்றழுத்த தாழ்வு உருவாகும். இது அடுத்த 48 மணி நேரத்தில் தீவிரமடைந்து மேற்கு வட மேற்கு திசையில் நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவான பிறகே, அது மேற்கு வடமேற்கு திசையில் நகரக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.