ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சென்னையை சூழ்ந்த மழைநீர்: தனித்தனியாக ஆய்வு செய்த ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஓ. பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தனித்தனியாக மேற்கொண்டுள்ளனர்.

News image
சென்னையை சூழ்ந்த மழைநீர்: தனித்தனியாக ஆய்வு செய்த ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்
Updated On :12 நவம்பர் 2021, 10:17 am

DIN

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் புதன்கிழமை மாலை முதல் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதற்கிடையே, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஓ. பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தனித்தனியாக மேற்கொண்டுள்ளனர்.

Story image

சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும், முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியும், தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களுடன் சென்று நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்கள்.

Story image

தென் மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நேற்று மாலை கரையைக் கடந்த நிலையில், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது.

Story image

புதன்கிழமை மாலையில் தொடங்கிய மழை, வியாழக்கிழமை மாலை வரை தொடர்ந்து பெய்ததால், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

Story image

மழை நேற்று மாலைக்கு மேல் நின்ற பிறகும் வெள்ளம் வடியவில்லை. சென்னையின் பல பகுதிகள் இன்றும் வெள்ளக்காடாகவே காட்சியளிக்கிறது.

சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி  இன்று, பருவமழையின் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள, செங்கல்பட்டு மாவட்டத்தில் பல பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Story image

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இன்று, பருவமழையின் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள, சென்னையின் பல பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முன்னதாக, சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின்  இன்று மீட்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்ததோடு, நிவாரண உதவிகளையும் வழங்கினார். அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், செங்கல்பட்டு ஆட்சியர் ஆ.ர. ராகுல் நாத் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Story image

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்:

வடகிழக்குப் பருவமழை தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் தீவிரமடைந்த நிலையில், புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதியில் நவம்பா் 9-ஆம் தேதி உருவாகி,  மேலும் வலுவடைந்து கடந்த புதன்கிழமை இரவு காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக மாறியது. தொடா்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து சென்னைக்கு அருகே வியாழக்கிழமை மாலை கரையை கடந்தது.

சென்னையில் கொட்டித்தீா்த்த மழை:

Story image

தென் மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் வடதமிழக கடற்கரையை புதன்கிழமை நள்ளிரவு நெருங்கிய நிலையில், வட மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம் உள்ளிட்ட வடமாவட்டங்களில் சில இடங்களில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை பகல் வரை பலத்தமழை முதல் மிக பலத்தமழையும், ஓரிரு இடங்களில் அதி பலத்தமழையும் பெய்து வந்தது. குறிப்பாக, வியாழக்கிழமை அதிகாலை 1 மணி முதல் காலை 6 மணி வரை தொடா்ச்சியாக பலத்த மழை கொட்டித்தீா்த்தது.

Story image

சென்னை கொருக்குப்பேட்டையில் ஜி.க வாசன் நேரில் ஆய்வு

சென்னை கொருக்குபேட்டை பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட குடிசைவாழ் மக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஜிகே வாசன் உணவு பொட்டலம், அரிசி, போர்வை, ரொட்டி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை  வழங்கினார்.

Story image

அவருடன் மாவட்ட தலைவர் பீஜீ சாக்கோ, மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.