புவனகிரி, சிதம்பரம் பகுதிகளை பார்வையிட்ட ஓ.பன்னீர்செல்வம் - பழனிசாமி 

கடலூர் மாவட்டம், புவனகிரி, சிதம்பரம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று பார்வையிட்டு பொது மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர். 
புவனகிரி, சிதம்பரம் பகுதிகளை பார்வையிட்ட ஓ.பன்னீர்செல்வம் - பழனிசாமி 
புவனகிரி, சிதம்பரம் பகுதிகளை பார்வையிட்ட ஓ.பன்னீர்செல்வம் - பழனிசாமி 

சிதம்பரம்: கடலூர் மாவட்டம், புவனகிரி, சிதம்பரம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று பார்வையிட்டு பொது மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர். 

சென்னையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பார்வையிட்டனர்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் நிவாரண உதவிகளை வழங்கினார். அந்த வகையில் இன்று செவ்வாய்க்கிழமை கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை  பார்வையிட்டனர். அதன்படி இன்று காலை 9 மணி அளவில் புவனகிரி பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நிவாரண பொருள்களை வழங்கினர்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், சட்டமன்ற உறுப்பினர்கள்  கே.ஏ.பாண்டியன், அருள்மொழிதேவன், முன்னாள் எம்.எல்.ஏ,க்கள் முருகுமாறன், குமரகுரு, கலைச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

பின்னர் புவனகிரி அருகே ஏரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை அவர்கள் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். இதையடுத்து சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட பூவாலை  பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெற்பயிர்களை  பார்வையிட்டனர். தொடர்ந்து சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

பின்னர் அங்கிருந்து மயிலாடுதுறைக்கு சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை புவனகிரி சட்டமன்ற உறுப்பினரும், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளருமான  அருண்மொழிதேவன், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினரும், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான பாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர்.

முன்னதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு அ.தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com