மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் வ.உ.சி. குருபூஜை விழா
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் வியாழக்கிழமை சுதந்திரப் போராட்டத் தியாகி செக்கிழுத்த செம்மல் வ.உ.சி சிதம்பரம் பிள்ளையின் குருபூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் வியாழக்கிழமை சுதந்திரப் போராட்டத் தியாகி செக்கிழுத்த செம்மல் வ.உ.சி சிதம்பரம் பிள்ளையின் குருபூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மானாமதுரையில் ஆர்.சி. தெருவில் அப்பகுதியைச் சேர்ந்த அனைத்து வெள்ளாளர் கூட்டமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் சோம. சதீஷ்குமார் தலைமையில் வ.உ.சி உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
மேலும், மானாமதுரையில் பல்வேறு பகுதிகளிலும் வ.உ.சி குருபூஜை விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மானாமதுரை அருகே கால் பிரிவு கிராமத்தில் வ.உ. சிதம்பரம் பிள்ளை உருவப் படத்திற்கு கிராமத்தினர் மாலைகள் அணிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்புவனம் நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வ.உ.சி குருபூஜை விழாவை முன்னிட்டு பிள்ளைமார் சமூகத்தினர் மற்றும் வ.உ.சி நற்பணி மன்றத்தினர் வ.உ.சி பேரவையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வ.உ.சி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் திரளானோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...