உறுதியாக இறுதிவரை போராடிய விவசாயிகளுக்கு வாழ்த்துக்கள்: சூர்யா
உறுதியாக இறுதிவரை போராடிய விவசாயிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.


உறுதியாக இறுதிவரை போராடிய விவசாயிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், உழவே தலை
விவசாயிகளின் அறப்போராட்டம் வென்றது நம்பிக்கை அளிக்கிறது. ஜனநாயகத்தில் மக்கள் தான் எஜமானர்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த அரசின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. உறுதியாக இறுதிவரை போராடிய விவசாய பெருமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்... இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையும் படிக்க- ‘பாஜகவுடன் கூட்டணி இல்லை’: சிரோமணி அகாலிதளம்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக, நாடு முழுவதும் விவசாயிகளும் எதிர்க்கட்சிகளும் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். தமிழகத்திலும் சட்டப்பேரவையில், இந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், குருநானக் பிறந்தநாளையொட்டி பேசிய பாரத பிரதமர் நரேந்திர மோடி, வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...