ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

தமிழகத்தில் நவ. 25, 26-ல் மிக கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 5 நாள்களுக்கு மழை தொடரும் எனவும் நவம்பர் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலைஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

News image
தமிழகத்தில் நவ. 25, 26-ல் மிக கனமழைக்கு வாய்ப்பு
Updated On :22 நவம்பர் 2021, 7:43 am

DIN

தமிழகத்தில் 5 நாள்களுக்கு மழை தொடரும் எனவும் நவம்பர் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலைஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தியில்,

தென்கிழக்கு வங்க கடற்பகுதியில்‌ (3.1 இலோ மீட்டர்‌ உயரம்‌ வரை) நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக கடலோர பகுதி வரை நீடிப்பதன்‌ காரணமாக

22.11.2021: ஈரோடு, சேலம்‌, நாமக்கல்‌, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, தென்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அனேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ அனேக இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

23.11.2021: மதுரை, ராமநாதபுரம்‌, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, தென்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அனேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ அனேக இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

24.11.2021: ராமநாதபுரம்‌, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய தென்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ கடலோர மாவட்டங்கள்‌, புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, வட உள்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

25.11.2021, 26.11.2021: கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஓரிரு
இடங்களில்‌ கன முதல்‌ மிக கன மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.