இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா நாளை திருப்பூர் வருகை  

பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா  புதன்கிழமை திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். 

News image
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா
Updated On :23 நவம்பர் 2021, 9:37 am

DIN


திருப்பூர்: பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா  புதன்கிழமை திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். 

திருப்பூர் பல்லடம் சாலையில் வித்தியாலயம் பேருந்து நிறுத்தம் அருகே பாஜக மாவட்ட அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா புதன்கிழமை மாலை 3.30 மணியளவில் திறந்து வைக்கிறார். மேலும், ஈரோடு, திருநெல்வேலி, திருப்பத்தூர் ஆகிய இடங்களிலும் கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைக்கிறார். 

இதைத்தொடர்ந்து மாவட்ட அலுவலகத்தின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல். முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்க உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.