அண்ணா பிறந்தநாள்: 700 ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க அரசாணை வெளியீடு
அண்ணாவின் பிறந்தநாளையொட்டி நீண்ட காலம் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 700 ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


அண்ணாவின் பிறந்தநாளையொட்டி நீண்ட காலம் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 700 ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளையொட்டி(செப்.15) 700 ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவர் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பா் மாதம் நடைபெற்ற சட்டப் பேரவை கூட்டத் தொடரில் அறிவித்தாா்.
அதன்படி, தமிழகம் முழுவதும் நீண்ட காலம் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 700 ஆயுள் தண்டனைக் கைதிகளை நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யும் அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் பாலியல் வன்கொடுமை, தீவிரவாதம், மதவாதம், ஜாதி மோதலில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்படமாட்டார்கள் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...