ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு குறைவு: வானிலை மையம்

வங்கக் கடலில் நிலவி வரும் காற்று சுழற்சியானது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாக வாய்ப்பு குறைவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
வானிலை மையம்
Updated On :25 நவம்பர் 2021, 6:05 am

DIN

வங்கக் கடலில் நிலவி வரும் காற்று சுழற்சியானது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாக வாய்ப்பு குறைவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் இன்று இரவுக்குள் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் எனவும் இதன் காரணமாக அடுத்த 5 நாள்களுக்கு தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், காற்றழுத்த சுழற்சியானது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறுவதற்காக வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக தற்போது வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், காற்றழுத்த சுழற்சி தொடர்ந்து நீடிக்கும் என்பதால் அடுத்த 5 நாள்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.