காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனமாக இருக்குமாறு ஆட்சியர் மா.ஆர்த்தி சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியது.. கடந்த அக்டோபர் மற்றும் நடப்பு நவம்பர் மாதங்களில் பெய்த வடகிழக்குப் பருவ மழையினால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 341 ஏரிகளும், ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் உள்ள 380 ஏரிகளும் 100 சதவிகிதம் நிரம்பியுள்ளது.
இதையும் படிக்கலாமே.. திருவள்ளூர், ராணிப்பேட்டையில் இன்று அதி கனமழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்
இதனால் உபரி நீரானது கலங்கல்கள் வழியாக செல்கிறது. தற்பொது பெய்து வரும் பலத்த மழை காரணமாக பாலாறு, செய்யாறு, அடையாறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் ஏரிகள், ஆறுகள், தரைப்பாலங்கள் மற்றும் தடுப்பணை உள்ள பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். தண்ணீரில் இறங்கவோ, குளிக்கவோ, கடக்கவோ, துணி துவைக்கவோ, செல்ஃபி எடுக்கவோ வேண்டாம்.
முக்கியமாக வீட்டில் உள்ள சிறுவர், சிறுமியர்களையும், கால்நடைகளையும் ஆற்றின் அருகில் செல்லாமல் இருக்கவும், பொதுமக்கள் விழிப்புணர்வோடும், பாதுகாப்பாகவும் இருக்குமாறும் ஆட்சியர் மா.ஆர்த்தி கேட்டுக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும்! - இஸ்ரேல் வலியுறுத்தல்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்! - திமுக
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


