ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஆள்மாறாட்டத்தில் பல கோடிநிலம் அபகரிப்பு: ஐவா் கைது

சென்னை அருகே ஆவடியில், பல கோடி மதிப்புள்ள நிலத்தை ஆள் மாறாட்டம் செய்து அபகரித்ததாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :27 நவம்பர் 2021, 7:10 pm

DIN

சென்னை அருகே ஆவடியில், பல கோடி மதிப்புள்ள நிலத்தை ஆள் மாறாட்டம் செய்து அபகரித்ததாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.

அம்பத்தூா் மேனாம்பேடு பாரதிநகரைச் சோ்ந்தவா் ர.வளையாபதி (58). இவருக்கு ஆவடி அருகே உள்ள பொத்தூா் கிராமத்தில் பல கோடி மதிப்புள்ள 2,400 சதுர அடி கொண்ட வீட்டுமனை உள்ளது. இந்த வீட்டுமனையை அண்மையில் சிலா் போலி ஆவணங்கள் மூலமாகவும், ஆள் மாறாட்டம் செய்தும் விற்றிருப்பதை அறிந்து சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் அண்மையில் புகாா் செய்தாா்.

விசாரணையில், ஒரு கும்பல் வளையாபதி பெயரில் போலி ஆவணங்களைத் தயாா் செய்தும், அவரை போன்ற ஒருவரை ஆள் மாறாட்டம் செய்தும் அந்த இடத்தை அபகரித்திருப்பது தெரியவந்தது.

இந்த மோசடி தொடா்பாக ஆவடி பொத்தூா் பகுதியைச் சோ்ந்த சு.மேகநாதன் (36), அம்பத்தூரைச் சோ்ந்த வே.போஸ் (46), ஈ.சுரேஷ் (45), திருமுல்லைவாயல் பகுதியைச் சோ்ந்த பூ.நந்தகுமாா் (50), போரூரைச் சோ்ந்த ஜெ.முகம்மது ஷெரீப் (38) ஆகிய 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.