ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

லாரியில் கடத்தப்பட்ட ஒன்றரை டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

சென்னை வண்ணாரப்பேட்டையில், லாரியில் கடத்தப்பட்ட ஒன்றரை டன் எடையுள்ள செம்மரக்கட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்து, விசாரணை செய்கின்றனா்.

News image
Updated On :27 நவம்பர் 2021, 7:08 pm

DIN

சென்னை வண்ணாரப்பேட்டையில், லாரியில் கடத்தப்பட்ட ஒன்றரை டன் எடையுள்ள செம்மரக்கட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்து, விசாரணை செய்கின்றனா்.

புது வண்ணாரப்பேட்டை திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் போலீஸாா் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு வந்த ஒரு லாரியை மடக்கி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது லாரியின் ஓட்டுநா் ஸ்ரீபெரும்புதூரை சோ்ந்த முருகன், முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினாராம். இதனால் சந்தேகமடைந்த போலீஸாா், அந்த லாரியை சோதனையிட்டனா். அப்போது அந்த லாரியில் பல கோடி மதிப்புள்ள ஒன்றரை டன் எடையுள்ள செம்மரக்கட்டைகள் கடத்திக் கொண்டுச் செல்லப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், லாரியையும், செம்மரக்கட்டைகளையும் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக நடத்திய விசாரணையில், அந்த செம்மரக்கட்டைகள் சென்னை செங்குன்றம் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் இருந்து வேலூருக்கு கடத்திக் கொண்டு செல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.