வெள்ளநீரில் மிதக்கும் சென்னை சாலைகள்! (படங்கள்)
தொடர் கனமழையால் சென்னையில் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


தொடர் கனமழையால் சென்னையில் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கே.கே. நகர் உதயம் திரையரங்கம் சந்திப்பு அருகே மழை நீரை வெளியேற்றும் பணி
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையிலும் விடாது பெய்த மழையினால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது.
இதையும் படிக்க | சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள இடங்கள்

சென்னை தி. நகர் பேருந்து நிலையம்
இதையடுத்து சென்னையில் முக்கிய சாலைகளில் நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து வழிகள் அவ்வப்போது மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
_.jpeg)
சென்னை கே.கே. நகர் அரசு புனர்வாழ்வு மருத்துவமனையைச் சூழ்ந்துள்ள வெள்ளம்.
வெள்ளம் சூழ்ந்திருக்கும் முக்கிய சாலைகளில் தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் பல இடங்களில் வெள்ள நீர் வடியாததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
முழு புகைப்படங்களைப் பார்க்க->>தண்ணீரில் தத்தளிக்கும் சென்னை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...