ஆயுத பூஜை விடுமுறை: சென்னையில் கூட்ட நெரிசலை தடுக்கப் பேருந்து நிலையங்கள் மாற்றம்

ஆயுத பூஜை விடுமுறையின்போது கூட்ட நெரிசலை தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
சென்னையில் கூட்ட நெரிசலை தடுக்கப் பேருந்து நிலையங்கள் மாற்றம்
சென்னையில் கூட்ட நெரிசலை தடுக்கப் பேருந்து நிலையங்கள் மாற்றம்

ஆயுத பூஜை விடுமுறையின்போது கூட்ட நெரிசலை தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

ஆயுத பூஜை விடுமுறையின் போது சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்வர். ஆகையால், கூட்ட நெரிசலை தடுக்க சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் கூறியது,

தீபாவளி, பொங்கலை போல் கூட்ட நெரிசலை தடுக்க சென்னையில் இருந்து அக். 12, 13 தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரத்திலிருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

திருவண்ணமலை, செஞ்சி, வந்தவாசி, சேத்பட்டு, போளூர் செல்லும் பேருந்துகள் தாம்பரத்திலிருந்து, வேலூர், ஆரணி, ஆற்காடு, ஓசூர், திருப்பத்தூர், செய்யாறு செல்லும் பேருந்துகள் பூந்தமல்லியிலிருந்து இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com