கிருஷ்ணகிரியில் குழந்தைகளுக்கான எழுத்தறிவித்தல்!
கிருஷ்ணகிரியில் சரஸ்வதி பூஜையையொட்டி குழந்தைகளுக்கான எழுத்து அறிவித்தல் நிகழ்வு ஐயப்பன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

சரஸ்வதி பூஜையையொட்டி கோயிலின் குருக்கள் ஆர். சிவதாஸ், பச்சரிசியில் குழந்தைகளின் விரலைக் கொண்டு ஓம் ஹரி ஸ்ரீ கணபதே நமக என எழுத செய்தார்.








