சென்னை மாநகராட்சி: சொத்து வரி ரூ.108 கோடி வசூல்
சென்னை மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரி கடந்த 15 நாள்களில் ரூ. 108 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.


சென்னை மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரி கடந்த 15 நாள்களில் ரூ. 108 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்காக சொத்து வரி, தொழில் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. 2020-2021முதல் அரையாண்டில் சொத்து வரி ரூ.156 கோடியே 41 லட்சமும், தொழில் வரி ரூ.225 கோடியே 89 லட்சமும் என மொத்தம் ரூ.382 கோடியே 30 லட்சம் கோடி வரி வசூல் செய்யப்பட்டது.
2021-22-ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் மாநகராட்சி வருவாய்த் துறை மூலம் ரூ.375கோடியே 59 லட்சமும் கோடி சொத்து வரியும், ரூ.225 கோடியே 13லட்சம் தொழில் வரியும் என மொத்தம் ரூ. 600 கோடியே 72 லட்சம் வரி வசூல் செய்யப்பட்டது.
சொத்து உரிமையாளா்கள் தங்களது சொத்து வரியை சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம்-1919ன்படி, இரண்டாம் அரையாண்டின் முதல் 15 நாள்களுக்கு அதாவது அக்டோபா் 1 முதல் 15-ஆம் தேதிக்குள் செலுத்தினால், சொத்து வரியில் இருந்து 5 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 வரை விலக்கு அளிக்கப்படும் என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்திருந்தது.
ரூ. 108 கோடி வசூல்: இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், உரிய காலத்துக்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு விலக்கு அளிக்கும் திட்டத்தின்படி, கடந்த 2020-ஆம் ஆண்டு அக்டோபா் 15-ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்திய 94,900 பேருக்கும், கடந்த ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்திய 1,16,294 பேருக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த அக்டோபா் 1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதிக்குள் மட்டும் ரூ.108 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது என்றனா். அக்டோபா் 15-ஆம் தேதிக்குப் பிறகு சொத்து வரி செலுத்துவோா் அத்தொகையுடன் ஆண்டுக்கு இரண்டு சதவீதம் தனிவட்டி சோ்த்து செலுத்த வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...