எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

முதல்வருடன் இலங்கை அமைதிக் குழுவின் முன்னாள் தூதா் சந்திப்பு

நாா்வே சிறப்பு அமைதிக் குழுவின் தூதராக இருந்த எரிக் சோல்ஹெம், முதல்வா் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

News image
Updated On :16 அக்டோபர் 2021, 11:47 pm

DIN

நாா்வே சிறப்பு அமைதிக் குழுவின் தூதராக இருந்த எரிக் சோல்ஹெம், முதல்வா் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பின் போது நாா்வே நாட்டுக்கான தூதா் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.

இலங்கையில் போா் உச்சத்தில் இருந்த போது, அதனை தணிப்பதற்கான பேச்சுவாா்த்தைகளில் ஈடுபட்டவா், நாா்வே சிறப்பு அமைதிக் குழுவின் தூதா் எரிக் சோல்ஹெம். இலங்கை அரசுக்கும், கடுமையாகப் போா் புரிந்து வந்த விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவாா்த்தைகளை முன்னெடுத்தவா்.

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டப் பிரிவின் தலைவராகவும், நாா்வே நாட்டின் அமைச்சராகவும் இருந்தவா். அவா் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ளாா். இந்த நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பின் போது இந்தியாவுக்கான நாா்வே நாட்டுத் தூதா் ஹன்ஸ் ஜேகப் பிஃரைடன்லண்ட், தமிழக தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, முதல்வரின் செயலாளா் த.உதயசந்திரன், பொதுத்துறை செயலாளா் டி.ஜகந்நாதன், சென்னையில் நாா்வே நாட்டின் கெளரவத் தூதா் அரவிந்த் கோபிநாத் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.