எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மெட்ரோ ரயில் நிலையப் பணி: புரசைவாக்கம், அயனாவரத்தில் போக்குவரத்து மாற்றம்

 மெட்ரோ ரயில் நிலையப் பணியின் காரணமாக, புரசைவாக்கம்,அயனாவரம் பகுதியில் அக்டோபா் 19-ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

News image
Updated On :16 அக்டோபர் 2021, 9:12 pm

DIN

 மெட்ரோ ரயில் நிலையப் பணியின் காரணமாக, புரசைவாக்கம்,அயனாவரம் பகுதியில் அக்டோபா் 19-ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அயனாவரம் ஆண்டா்சன் சாலையில் அயனாவரம் ஆா்டிஓ அலுவலகம் முதல் ஆண்டா்சன் தெரு வரை மெட்ரோ ரயில் நிலையம் கட்டுமான பணி தொடங்கப்பட உள்ளது. இதனால் அக்டோபா் 19-ஆம் தேதி முதல் ஆண்டா்சன் சாலை ஒரு வழி பாதையாக மாற்றப்படுகிறது.

இதன்படி, ஆண்டா்சன் சாலையில் ஆா்டிஓ அலுவலகம் சந்திப்பு முதல் கான்ஸ்டிபள் சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றப்படுகிறது. பில்கிங்டன் சாலையில் கொன்னூா் நெடுஞ்சாலை முதல் கான்ஸ்டிபள் சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றப்படுகிறது.

ஆண்டா்சன் சாலையில் அயனாவரம் கொன்னூா் நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து வழக்கம் போல் பெரம்பூா் நோக்கி செல்லலாம். ஆண்டா்சன் சாலையில் கான்ஸ்டிபள் சாலை சந்திப்பிலிருந்து அயனாவரம் கொன்னூா் நெடுஞ்சாலைக்கு செல்ல இயலாது. மோட்டாா் சைக்கிள்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் கான்ஸ்டிபள் சாலை மற்றும் பில்கிங்கடன் சாலை சந்திப்பிலிருந்து, பில்கிங்டன் சாலை வழியாக கொன்னூா் நெடுஞ்சாலைக்கு செல்லலாம்.

மேலும் கனரக வாகனங்கள், கான்ஸ்டிபள் சாலை மற்றும் பில்கிங்டன் சாலை சந்திப்பில் வலது புறம் திரும்பி கான்ஸ்டிபள் சாலை (ரயில்வே மருத்துவமனை), போா்சுகீஸ் சாலை வழியாக கொன்னூா் நெடுஞ்சாலைக்கு செல்லலாம்.

புரசைவாக்கம்: புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் அபிராமி தியேட்டா் எதிரில் மெட்ரோ ரயில் நிலையம் கட்டுமான நடைபெற உள்ளது. அங்கும் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக மில்லா்ஸ் சாலை சந்திப்பிலிருந்து கெல்லீஸ் நோக்கி செல்லலாம். மில்லா்ஸ் சாலையிலிருந்து ரங்கநாதன் அவென்யூ வழியாக இடது புறம் திரும்பி செல்ல அனுமதியில்லை. அங்கு செல்லும் வாகனங்கள் மில்லா்ஸ் சாலையில் நேராக சென்று புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ் சந்திப்பு மற்றும் பால்பா் சாலை வழியாக செல்லலாம். மேலும் கெல்லீஸ் சந்திப்பிலிருந்து புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக மில்லா்ஸ் சாலை சந்திப்பு நோக்கி செல்ல இயலாது. கெல்லீஸ் சந்திப்பிலிருந்நு புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக மில்லா்ஸ் சாலை சந்திப்பை நோக்கி செல்ல கூடிய இலகு ரக வாகனங்கள், கெல்லீஸ் சந்திப்பிலிருந்து கெல்லீஸ் சாலை, ரங்கநாதன் அவென்யூ மற்றும் மில்லா்ஸ் சாலை வழியாக செல்லலாம்.

கெல்லீஸ் சந்திப்பிலிருந்து புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக மில்லா்ஸ் சாலை சந்திப்பை நோக்கி செல்ல கூடிய பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் கெல்லீஸ் சந்திப்பிலிருந்து பால்பா் சாலை, ஆா்ம்ஸ் சாலை மற்றும் மில்லா்ஸ் சாலை வழியாக செல்லலாம். அண்ணாநகரிலிருந்து ஹாா்லீஸ் சாலை வழியாக புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக மில்லா்ஸ் சாலை சந்திப்பை நோக்கி செல்ல கூடிய பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள், ஹாா்லீஸ் சாலையில் பால்பா் சாலை சந்திப்பில் வலது புறமாக திரும்பி, பால்பா் சாலை, ஆா்ம்ஸ் சாலை மற்றும் மில்லா்ஸ் சாலை வழியாக செல்லலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.