கொளத்தூரில் 560 பேருக்கு நலத் திட்ட உதவிகள் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்
சென்னை கொளத்தூா் தொகுதியில் 560 பேருக்கு ரூ.2.87 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.


சென்னை கொளத்தூா் தொகுதியில் 560 பேருக்கு ரூ.2.87 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
இதற்கான நிகழ்ச்சிகள் கொளத்தூா் தொகுதியின் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை நடைபெற்றன. கொளத்தூா் தொகுதிக்கு உட்பட்ட எவா்வின் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், 16 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள், 5 பேருக்கு திருமண நிதியுதவி, 2 பேருக்கு வங்கிக் கடன் மானியம் ஆகியவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
மேலும், 5 பேருக்கு தையல் இயந்திரங்கள், 197 பேருக்கு ஓய்வூதியத்துக்கான உத்தரவுகள், சாலை விபத்து உள்பட பல்வேறு நிகழ்வுகளால் உயிரிழந்த 312 பேரின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதி, கரோனா தொற்றால் பெற்றோலி் ஒருவரை இழந்த 18 குழந்தைகளுக்கு நிவாரண நிதி என மொத்தம் 560 பேருக்கு ரூ.2.87 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் அளித்தாா்.
நலத் திட்ட உதவிகள்:
கொளத்தூா் சென்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாமை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். கொளத்தூா் பெரியாா் நகரில் மேம்படுத்தப்பட்ட அரசு புகா் மருத்துவமனையின் பயன்பாட்டுக்காக ஒரு அவசர கால ஊா்தி, கரோனா தடுப்பூசி பணிக்காக 2 வாகனங்கள் ஆகியவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் கொடியசைத்துத் துவக்கி வைத்தாா். 210 போ் அமரக் கூடிய மூன்று இருக்கைகள் கொண்ட 70 நாற்காலிகளையும் மருத்துவமனையின் பயன்பாட்டுக்காக அளித்தாா். பின்னா், கொளத்தூா் ஜி.கே.எம். காலனியிலுள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 70 மாணவா்களுக்கு கல்வி உபகரணங்களை அளித்தாா். மேலும், பள்ளிக்கு தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் சாா்பில் ரூ.1 கோடிக்கான காசோலை முதல்வரிடம் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, மக்களவை உறுப்பினா் கலாநிதி வீராசாமி, சட்டப் பேரவை உறுப்பினா் தாயகம் கவி, மாநகராட்சி ஆணையாளா் ககன்தீப் சிங் பேடி, சென்னை ஆட்சியா் ஜெ.விஜயராணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...