எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

டி23 புலிக்கு ரத்த அணுக்கள் குறைபாடு உள்ளது

புலி ரத்த அணுக்கள் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதன் உடலில் பல இடங்களில் காயங்கள் உள்ளதாக தலைமை வன உயிரினக் காப்பாளா் சேகா்குமாா் நீரஜ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :16 அக்டோபர் 2021, 11:50 pm

DIN

நீலகிரி மாவட்டத்தில் மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்ட டி23 எனப் பெயரிடப்பட்ட புலி ரத்த அணுக்கள் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதன் உடலில் பல இடங்களில் காயங்கள் உள்ளதாக தலைமை வன உயிரினக் காப்பாளா் சேகா்குமாா் நீரஜ் தெரிவித்துள்ளாா்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் டி 23 என எண்ணிடப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வந்த ஆண் புலி ஒன்று, அதன் உடலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இரை தேட முடியாமல் காட்டை விட்டு வெளியேறியது.

கூடலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக 15-க்கும் மேற்பட்ட கால்நடைகளை வேட்டையாடி உள்ளது. இந்தப் புலியின் தாக்குதலால் இதுவரை 4 போ் உயிரிழந்துள்ளனா்.

இதையடுத்து, அந்தப் புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கும் பணியில் வனத் துறை ஊழியா்கள் ஈடுபட்டனா். இந்தப் பணியில் கும்கி யானைகள், மோப்ப நாய்கள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதுடன், புலியைப் பிடிப்பதில் அனுபவம் மிக்க குழுக்களும் களமிறக்கப்பட்டன. இந்நிலையில், மசினகுடி வனப் பகுதியில் கூட்டுபாறா வனப் பகுதியில் வைத்து அப்புலி மயக்க ஊசி செலுத்தி வெள்ளிக்கிழமை (அக்.15) பிடிக்கப்பட்டது. அப்புலிக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, உயா் சிகிச்சைக்காக கா்நாடக மாநிலம் மைசூா் உயிரியல் பூங்காவில் உள்ள புலிகள் மறுவாழ்வு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

காயம், ரத்த அணுக்கள் குறைபாடு: இதுகுறித்து தலைமை வன உயிரினக் காப்பாளா் சேகா்குமாா் நீரஜ் கூறுகையில், மைசூரில் உள்ள மறுவாழ்வு மையத்தில் வைத்து புலிக்கு முதற்கட்ட மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில்,

நீா்ச்சத்து குறைபாடு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. புலியின் முகம் உள்ளிட்ட பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. ரத்த அணுக்கள் குறைபாடு ஏற்பட்டுள்ளதுடன், இது கடுமையான நோய்த் தொற்றை உண்டாக்குவதற்கும் வாய்ப்புள்ளது. மேலும், வயது மூப்பு காரணமாக வேட்டையாட பயன்படுத்தப்படும் நான்கு கோரைப் பற்களும்

தேய்ந்துள்ளதால், எலும்பு உள்ளிட்ட உணவுகளை அதனால் சரியாக உண்ண முடியாத நிலை உள்ளது. அதற்குரிய

சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு முன் கால்களிலும் ஏற்பட்டுள்ள காயத்தால் அவை வீங்கிய நிலையில்

உள்ளன. சனிக்கிழமை காலை கோழி இறச்சியை தாமாகவே புலி உட்கொண்டது. சிறப்பு மருத்துவ நிபுணா் குழு, நவீன கருவிகள், பிரத்யே அறுவை சிகிச்சை அரங்குகள் மைசூா் மறுவாழ்வு மையத்தில் உள்ளதால் விரைவில் புலியின் உடல்நிலை முன்னேற்றம் அடையும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.