ஹிந்தி கற்றுக்கொள்ள அறிவுரை சொன்னவரால் தமிழில் மன்னிப்புக் கேட்ட சொமாட்டோ

அனைவரும் ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என சொமாட்டோ நிறுவன ஊழியரின் கருத்துக்கு வாடிக்கையாளரிடம் அந்நிறுவனம் இன்று மன்னிப்பு கேட்டுள்ளது.
ஹிந்தி கற்றுக்கொள்ள அறிவுரை சொன்னவரால் தமிழில் மன்னிப்புக் கேட்ட சொமாட்டோ
ஹிந்தி கற்றுக்கொள்ள அறிவுரை சொன்னவரால் தமிழில் மன்னிப்புக் கேட்ட சொமாட்டோ
Published on
Updated on
1 min read

அனைவரும் ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என சொமாட்டோ நிறுவன ஊழியரின் கருத்துக்கு வாடிக்கையாளரிடம் அந்நிறுவனம் இன்று மன்னிப்பு கேட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த ஆகாஸ் என்பவர் நேற்று(அக்.18) சொமாட்டோவில் உணவு வாங்கியுள்ளார். அப்போது உணவு விநியோகிப்பவர் தவறாக விநியோகம் செய்ததாக வாடிக்கையாளர் சேவை மையத்திடம் பேசியுள்ளார். அப்போது, வாடிக்கையாளர் சேவை மைய ஊழியரிடம் ஹிந்தி தெரியாது எனக் கூறிய ஆகாஸிடம், ஹிந்தி தேசிய மொழி என்பதால் அனைவரும் சிறிதளவாது தெரிந்து வைத்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.

அந்த உரையாடலை தனது டிவிட்டர் பக்கத்தில் ஆகாஸ் பதிவிட்டிருந்தார். இதையடுத்து நேற்று முதல் சொமாட்டோ நிறுவனத்திற்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து, இன்று காலை சொமாட்டோ நிறுவனம் தனது அதிகார்வபூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஆகாஸிடம் மன்னிப்பு கோரியதுடன் அறிக்கையும் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “எங்கள் வாடிக்கையாளர் சேவை முகவரின் நடத்தைக்கு வருந்துகிறோம். வாடிக்கையாளரிடன் இந்த கருத்தை தெரிவித்த ஊழியரை பணிநீக்கம் செய்துள்ளோம். மேலும், தமிழகத்தில் கோவையில் சொமாட்டோவின் தமிழ் சேவை மையத்தை உருவாக்கி வருகிறோம். உணவு மற்றும் மொழி ஒவ்வொரு மாநிலத்தின், கலாச்சாரத்தின் இரண்டு அடித்தளங்கள் என்பதை புரிந்துள்ளோம்.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com